Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பரப்பாங்கண்டல் கிராமத்தில் இரவு நேரங்களில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப பெண் ஒருவரை அக்கிராமவாசி ஒருவர் பிடித்து உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மன்னார் பகுதியிலுள்ள பல கிராமங்களில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்களில் குறித்த பெண் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி பரப்பாங்கண்டல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் திருடச் சென்றுள்ளார்.
வீட்டு உரிமையாளர் மரணச்சடங்குக்கு சென்றிந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி குறித்த பெண் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது தனது வீட்டில் மனித நடமாட்டம் உள்ளதை வெளியிலிருந்து அவதானித்துள்ளார்.
மேலும், விட்டுக்குள்ளே சென்று வீட்டையும் சேதனை செய்துள்ளார். இதன்போது வீட்டில் ஒருவர் பதுங்கி இருப்பதை அறிந்து கொண்டு, உடனடியாக தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் வீட்டில் சோதனை செய்த போது வீட்டு சமையல் அறையில் பதுங்கி இருந்த குறித்த பெண்ணை பிடித்துள்ளார்.
குறித்த வீட்டில் இருந்து சுமார் 41 ஆயிரம் ரூபாய் பணத்தை குறித்த பெண் திருடியுள்ளார்.
குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரனைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago