2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

44 இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள 44 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்பாட்டின் ஆரம்ப பணிகளை மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்  இன்று சனிக்கிழமை (20) ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம் செய்த  அமைச்சர், அங்கு விஷேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஆலயத்தினையும்; பார்வையிட்டார்.  

அதனையடுத்து,   சிந்தாமணி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வின் ஆரம்ப பணிகளை ஆரம்பித்து வைத்திருந்த அமைச்சர், மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .