Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்
மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திவருவதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கள்ளுத்தவறணையில் பாதுகாவலராக பணியாற்றிவரும் ஆரோக்கியம் பேதுரு வயது (73) என்பவர், சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தில் வெட்டு காயங்கள் உள்ளதால் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள தனது அறையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கியுள்ள குறித்த வயோதிபர், சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா, சடலத்தை பார்வையிட்டு விசாரனைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கும் படி உத்தரவிட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago