Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாஞ்சோலை, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூண்டிச்சாலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தினால் குறித்த சிற்றூண்டிச்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மாஞ்சோலை வைத்தியசாலைக்குச் சொந்தமான குறித்த சிற்றூண்டிச்சாலையை முள்ளியவளையைச் சேர்ந்த ஒருவர் வருடாந்த குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
அதிகாலை திறக்கப்படும் குறித்த சிற்றூண்டிச்சாலை இரவு நேரத்தில் மூடப்படுவது வழக்கமாகும். வழமை போல நேற்று சனிக்கிழமை மூடப்பட்டுள்ளதுடன், குறித்த சிற்றூண்டிச்சாலையின் ஓய்வறையில் இரண்டு பேர் படுத்துறங்கியுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் திடீரென சிற்றூண்டிச்சாலைக்குள் புகை மண்டலமாக காட்சியளிக்கவே. அங்கு படுத்துறங்கியவர்கள் வெளியே வந்து வைத்தியசாலையில் கடமையிலிருந்த ஊழியர்களின் உதவியுடன் கடையை நடத்தும் உரிமையாளர், முள்ளியவளை பொலிஸ், மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சும்பவ இடத்துக்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸாரும், முள்ளியவளை 591 படை முகாம் இராணுவ அதிகாரிகளும் கூட்டாக இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இத்தீவிபத்துச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago