Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
அதிபர் இல்லாமல் இயங்கிவரும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் அ.த.க.பாடசாலைக்கு விரைவில் அதிபர் நியமிக்கப்படுவார் என முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.உதயராணி முனீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் அ.த.க.பாடசாலை கடந்த டிசெம்பர் மாதம் முதல் அதிபர் இல்லாமல் இயங்கிவருகின்றது. இது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜூலை மாதம் 1ஆம் திகதி அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான முயற்சிகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலைக்கு அதிபர் ஒருவரை தெரிவுசெய்து வடமாகாண கல்வியமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்.
210 மாணவர்களுடன் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை இப்பாடசாலை இயங்குகின்றது.
கடந்த டிசெம்பர் மாதம் இப்பாடசாலையின் அதிபர் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து இதுவரை புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை.
இப்பாடசாலையில் விஞ்ஞானம், ஆங்கிலம், சுகாதாரம், புவியியல், வரலாறு, குடியியல், சமயம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்களும் இல்லை. பல வகுப்புகள் தற்காலிகக் கொட்டகைகளில் இயங்குகின்றன.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago