Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 21 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கம்பன் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வு மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.
அகில இலங்கை கம்பர் கழகத்தின் அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.பரமதாசன், முசலி பிரதேச செயலாளர் செ.கேதீஸ்வரன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கிரிஸ் கந்தகுமார் மடு பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசோதி, மன்னார் உதவி பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறப்புப்பட்டிமன்றம், விவாத மேடை, கவியரங்கம், கருத்துக்களம் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago