Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 21 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அனைவரும் கருத்து கூறினர்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா அவர்களும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாக அமைந்திருந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago