Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கைம்பெண்கள் தினத்தையொட்டிய கிளிநொச்சியில் 'அமரா' பெண் தலைமைத்துவ குடும்பங்களில் ஒன்றுகூடல் நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
பெண்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், அவர்களின் கீழ் தங்கி வாழ்வோரின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். வாழ்வாதார முன்னேற்றங்கள் செய்ய வேண்டும், சமூகத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்பில் விழிப்புணர்வான பார்வை வேண்டும்.
அவர்களைக் குறைவாக நினைக்கூடாது ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடம் மகஜர் கையளிப்பது என இந்த ஒன்றுகூடலில் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மாவட்டத்தைச் சேர்ந்த விதவைகள் என பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago