Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - கோப்பாப்புலவு பிரதான வீதி, ஆசிய அபிவிருத்தி சங்கியின் 500 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீதி மிக நீண்டகாலமாக எந்தவித புனரமைப்பு பணிகளும் இன்றி மிக மோசமாக சேதமடைந்;து காணப்படுவதுடன், இவ்வீதியிலுள்ள பாலங்கள், மதகுகள் என்பனவும் சேதமடைந்து காணப்;படுகின்றன.
இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியொதுக்கீட்;டில் இவ்வீதி புனரமைக்கப்;படவுள்ளது.
இவ்வீதியை முழுமையாக புனரமைப்பதற்கு 600 மில்லியன் ரூபாய் நிதி தேவையெனவும் தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. பாலங்களை புனரமைப்பதுடன் குறிப்பிட்ட அளவு தூரம் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது.
கேப்பாபுலவு பகுதியில் இராணுவத்;;;தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளுடாக செல்லும் 12.85 கிலோமீற்றர் வீதியினையே புனரமைப்;;பதற்கு குறித்த நிதி ஒதுக்கீடு கிடைத்திருப்பதாகவும் அதனையே தற்போது புனரமைக்க முடியும்.
தற்;போது இவ்வீதிக்கு பதிலாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட மாற்று வழிப்பாதையை புனரமைக்க முடியாத நிலை காணப்படுவதுடன் தமது ஆளுகைக்கு உட்பட்ட வீதியை மாத்திரம் புனரமைக்க முடியும் எனவும் வீதி அபிவிருத்தி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago