Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 25 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடக்கிலும் கிழக்கிலும் 20,000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் அன்று சீமானுக்கும் இடையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில்,
இலங்கையின் நுகர்வு பொருட்களை அமெரிக்க கொள்வனவு செய்துவருகின்றது. இலங்கையின் அமெர்க்காவுக்கான ஏற்றுமதி 2 பில்லியன்களாகும். அந்த வகையில் தைத்த ஆடைகளே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இன்னும் இலங்கையில் அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை செய்வதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என நம்புகின்றேன். இலங்கையின் எழுத்தறிவு வீதம் ஆசியாவில் முன்னணியில் இருக்கின்றது. தொழிலாளர்களின் உழைக்கும் திறமை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய ஆறு தையல் தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். அதில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
யுத்தம் இந்த நாட்டில் பெரும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான விதவைகள் வடக்கிலும் கிழக்கும் இன்று காணப்படுகின்றனர். இவர்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த தொழிற்போட்டை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறினார்.
இது தொடர்பில் அமெரிக்க பதில் தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள நட்புறவு மிகவும் முக்கியமானது. எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவி செய்யும் எண்ணத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. அமைச்சரின் அழைப்பின் பேரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் வியாபார கமூகத்தை இலங்கைக்கு அழைத்துவர நாம் நடவடிக்கையெடுக்கவுள்ளோம். அதேபோல் இலங்கையின் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் அமெரிக்க பதில் தூதுவர் கூறினார்.
அதேவேளை, இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை தொடரட்பிலும் இர தரப்பு சந்திப்புக்களை எதிர்காலத்தில் எற்படுத்தவும் இதன்போது இனக்கம் காணப்பட்டது.
இந்த சந்திப்பின் போது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago