Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நானாட்டான், முசலி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவும் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வும் உயிலங்குளம் பெரிய கட்டைக்காட்டில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை(27)
இடம்பெற்றது.
நானாட்டான், முசலி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் வே.கதிரேசன் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண விவசாய கமநல சேவைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நானாட்டான், முசலி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் வெள்ளி விழா மலர் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.
அத்துடன், சங்கத்தில் இதுவரை சேவை செய்த தலைவர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், வடமாகாண விவசாய கமநல சேவைகள் அமைச்சர் மொ.ஐங்கரநேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வடமாகாண மதுவரி உதவி ஆணையாளர் வி.கிறிஸ்ரியோசப், மன்னார் கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் கே.ரவீந்திரநாதன், மன்னார் மதுவரி திணைக்கள பொருப்பதிகாரி ரி.நந்தகுமார், மன்னார் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago