Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 28 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்தில் மன்னார் சர்வோதைய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (27) மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
'அரசியல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கும் போது கருத்திற் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவுகோல்கள்' என்னும் கணிப்பீட்டு ஒப்பந்தத்தில் பல சிரேஷ்ட அரசியல் வாதிகளும் பல கட்சிகளைச் சேர்ந்தோரும் கையெப்பமிட்டுள்ளனர்.
இவ் பிரகடனம் 'மார்ச் 12 பிரகடனம்' என அழைக்கப்படுகின்றது.
அந்த வகையில், இப் பிரகடனத்தில் உள்ள அனைத்து அளவு கோல்களினையும் நாட்டின் பிரஜைகள் வாசித்து புரிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கையெழுத்து வேட்டை நாடு பூராகவும் தொடராக இடம்பெற்றது.
அந்த வகையில் மன்னார் தினயார் பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று சனிக்கிழமை(27) காலை 11.35 மணி தொடக்கம் 2.30 வரை இக் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள், மக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago