Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 29 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்
மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு அறுவடை செய்யும் நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (29) காலை வைபவ ரீதியாக இடம்பெற்றது.
கடந்த காலங்களில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இவ் நிறுவனம் அரச நிதி உதவியைப்பெற்று 2010ஆம் ஆண்டளவில் மேலும் சில பிரதேசங்களை அபிவிருத்தி செய்து தற்போழுது சுமார் 5 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்து வருவதாக மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தின் (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) பொது முகாமையளர் எம்.ஏ.துவான் மன்சில் தெரிவித்தார்.
இந்த நிலையில் இவ்வருடத்துக்கான உப்பு அறுவடை செய்யும் நிகழ்வு இன்று காலை 7.30 மணியளவில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வினை மாந்தை உப்பு உற்பத்தி நிலைய பொது முகாமையாளர் எம்.ஏ.துவான் மன்சில், மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் கொக்காலி, மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்களாக ஜே.மாஸ்லஸ் பீரிஸ்,வைத்தியர் செல்வ மகேந்திரன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது சுமார் 40 இற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டு உப்பு அறுவடையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago