2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமை

Gavitha   / 2015 ஜூன் 29 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களுக்கான பிரஜாவுரிமை பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையொன்று இலங்கை சட்ட உதவி ஆணைக்;குழுவினால், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்த மற்றும் இந்தியாவில் பிறந்த இலங்கையர்களுக்கான பிரஜாவுரிமையை  பெற்றுக்கொடுக்கும் இந்த நடவடிக்கையானது சனிக்கிழமை (27) கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை கடவுச்சீட்டு காரியாலயத்தின் அதிகாரிகள், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினர் இணைந்து சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட குடும்பங்களின் விண்ணப்பங்கள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான நடவடிக்கையொன்றை மீண்டுமொரு நாள் முன்னெடுத்து இந்;தியாவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கையர்களுக்கான பிரஜாவுரமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மேற்குறித்த ஐந்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்ற வளாகங்களிலும் இயங்கி வரும் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இலங்கை சட்ட உதவி ஆணைக்;குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .