2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவில் இடம்பெற்ற கருத்தரங்கில் டெனிஸ்வரன்

Thipaan   / 2015 ஜூன் 30 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அமெரிக்காவில் இடம்பெற்ற கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வில் இலங்கையின் பிரதிநிதியாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.

கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை (27) வரை இடம் பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல் வளங்கள் அழிந்து வருகின்றன.

இக்கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது. இக்கருத்தமர்வில் சர்வதேச ரீதியில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தமர்வில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாளும் நாடுகளில் இலங்கை முக்கிய இடம் வகிப்பதால், இலங்கையின் பிரதிநிதியாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் மிக முக்கிய மீன்பிடி துறைமுகங்களான அலபாமா, லோஸ்செஞ்சல்ஸ், கலிபோனியா, வோசின்டன், மெயிலாண்ட், போஸ்டன், சந்டாரூஸ் தீவு, அனகாப்பா தீவு, போன்ற இடங்களுக்கும் சென்று இயற்க்கை பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .