Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 01 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா திருப்பலி நாளை (02) வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மடு திருத்தளத்தின் ஆடித்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் திருப்பலிகள் ஆரம்பமாகின.
தொடர்ச்சியாக நவநாள் திருப்பலிகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று (01) புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு வேஸ்பர் நற்கருணை ஆராதணையும் நாளை வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ், அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
இந்த நிலையில் மடு திருத்தளத்தின் ஆடிமாத திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago