2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வன்புணர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனையளிக்க வேண்டும்: சி.ஆனந்தன்

Menaka Mookandi   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு, கைவேலி, மருதமடு பகுதியில் கடந்த 20ஆம் திகதி 6 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (01) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மேற்படி சிறுமியின் தாய், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடிச் சென்றுள்ள நிலையில், மனநோயாளியான தந்தையுடன் வீட்டில் இருந்த 6 வயது சிறுமியை, தாய்மாமனான சின்னவன் எனப்படும் 38 வயதுடைய சந்தேகநபரும் அவரது 18 வயது சகாவும் இணைந்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று வன்புணர்வுக்கு செய்ய முற்பட்டுள்ளனர்.

எனினும் சிறுமி கூக்குரல் இட்டதையடுத்து அயலவர்களால் அச்சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இவ்வாறான வன்புணர்வுச் செயற்பாடுகளில் ஈடுபடும்  நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக உடன் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

வித்தியாவின் கொலைக்கு பின்னர் நாடெங்கிலும் மாணவர் எழுச்சி ஏற்பட்ட பின்னரும் கூட இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கு பகுதியில் வன்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் பொதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதற்கு என திரைமறைவில் சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

எனவே, இவ்வாறானவர்கள் சமூகத்தில் இனங்காணப்படுவதுடன் குற்றங்கள் புரிவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .