Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 02 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறாமல் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'காணி; ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். குறிப்பிடட சில பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்ட அமைப்புக்களுக்கான நிதி கிடைக்காத காரணத்தினால் அந்த பணிகள் தாமதமடைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 807 வரையான குடும்பங்களே தற்போது மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளன. இதில் கண்ணிவெடி அகற்றப்;;படவேண்டிய பகுதிகளில் சற்றுத் தாமதமடைந்;தாலும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்து அவற்றில் மக்களை மீள்குடியேற்ற இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இரணைதீவு மக்;களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம்' என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago