2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - இலுப்பைக்கடவை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற  விபத்தில்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டனர்.  பின்னர், குழந்தையொன்று  மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தல ஆடித் திருவிழாவுக்கு வந்துவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி  முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மன்னார் நோக்கி பயணித்த வானும் மோதியதாக பொலிஸார் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .