2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் 41,000 குடும்பங்கள் மீளக்குடியேற்றம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில்  41,613 குடும்பங்களைச் சேரந்த 1 இலட்சத்து 36 ஆயிரத்து 961பேர் மீளக்குடியேறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தகால யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்கள் பெருமளவுக்கு மீள்குடியேறியுள்ளனர்.

இதேவேளை பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் என 807 குடும்பங்கள் மீள்குடியேற வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .