Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கான இணைந்த நேர அட்டவணை உரிய காலத்தில் வழங்கப்படாவிட்டால், ஐந்து மாவட்டங்களிலும் பணிப்பகிஸ்கரிப்புக்களில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கான இணைந்த நேர அட்டவணையை தயாரித்து அதன்படி சேவையில் ஈடுபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகத்தினர், இலங்கை போக்குவரத்துச்சபை சாலை முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் தனியார் பஸ்களுக்கான இணைந்த சேவைக்கான நேர அட்டவணைகள் வழங்கப்படாமையினால் இரு சேவைகளுக்குமிடையில் அடிக்கடி பிணக்குகள் எற்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பக்கசார்பின்றி செயற்படும் வகையில் குழு ஒன்றினை நியமித்து அதன் மூலம்; தீர்மானங்களை எடுத்து மக்களுக்கான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்;படும் என்றும் சேவை நோக்கோடு மேற்கொள்ளப்படும் இச்சேவைகள் மக்களை பாதிக்காத வகையில் வழங்கப்படவேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடனடிப்படையில் பஸ்களை கொள்வனவு செய்து பெரும் சிரமங்களின் மத்தியில் சேவையை வழங்கி வருகின்ற நிலையில் தமக்கான நேர அட்டவணைகளை தயாரித்து வழங்குவதிலோ அல்லது உரிய சேவைகளை வழங்குவதற்கோ தமக்கான ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லை.
இந்த நிலை தொடருமாக இருந்தால் ஐந்து மாவட்டங்களின் தனியார் பஸ்களும் பணிப்;பகிஸ்கரிப்பு செய்யவுள்ளோம்” என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago