Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்திலுள்ள குடும்பங்களின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுத்தந்து, தமக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்லுள்ள பன்னங்கண்டி கிராமத்தில் ஏற்கனவே மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் வழங்;கப்பட்ட தனியாருக்கு சொந்தமான இரு பயிர் செய்கை காணிகளில் தற்போது 295 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட பசுபதி கமம், சரஸ்வதி கமம், ஆகிய இரு காணிகளும் அதன் முன்னைய உரிமையாளர்கள் குடியிருப்;பதற்கோ அல்லது நாட்டின் உணவு உற்பத்திக்கு பங்;களிப்பு செய்யவோ இல்லை.
இந்நிலையில் கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து இடம்பெயர்ந்த மிகவும் வறிய மக்கள் குறித்த காணிகளில் குடியேறினர்.
இவ்வாறு குறித்த குடும்பங்கள் 2009 ஆம் ஆண்டு மீள்குடியமர்வின் பின்னர், மீள்குடியமர்ந்து தற்போது ஐந்து வருடங்களாகியும் இவர்களுக்கான காணி உரிமம் இல்லாமையால் நிரந்தர வீட்டுத்திட்டங்களோ அல்லது ஏனைய அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் ஆறுமாதத்திற்கென வழங்கப்பட்ட தற்;காலிக வீடுகளிலும் தகரக்கொட்டகைகளிலும் வாழ்ந்;து வருகின்;றனர்.
இவ்வாறு தகர கொட்டகைகளில் எந்;த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருவதுடன் குழந்தைகள், சிறுவர்கள், வெப்பம் காரணமாக தோல் நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வறுமை கோட்டின் கீழ்லுள்;ள, தமது நிலையினைக் கருத்திக்கொண்டு தமது காணி உரிமம் தொடர்பான பிரச்;சனைகளை தீர்த்து தமக்;கான வீட்டுத்திட்டங்களைப் பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;.
இது தொடர்பாக கரைச்சி பிரதேச செயலகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது,
ஏற்கனவே வழங்கப்பட்ட காணிகளை தற்போது மீளப்பெற்று இம்மக்களுக்கு வழங்க முடியாது. இவ்விடயத்தை மாகாண காணி அமைச்சுக்கும் காணி ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். விசேட திட்டத்தின் மூலம் அக்காணியை மீள சுவீகரித்து இம்மக்களுக்கு வழங்க முடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.
2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இக்குடும்பங்களில் 100 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட இருந்த போதும் அவர்கள் வறுமை காரணமாக வீட்டுத்திட்டத்தை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago