2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் பகிஸ்கரிப்பு

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரை இடமாற்றியதை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்கள், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் செல்லாது பகிஸ்கரித்துள்ளனர்.

பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய மைக்கல் கிரிஸ்ரின் என்பவரை மடு கல்வி வலயம் திடீர் என இடமாற்றியுள்ளனர்.

இதனை கண்டித்தே பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாது பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர் ஏ.எம்.சித்திக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்/ அடம்பன் மத்திய மகா வித்தியாலய படசாலையின் அதிபராக கடமையாற்றி மைக்கல் கிரிஸ்ரின் தனது சுய முயற்றியால் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் சரி கட்டட வளர்ச்சியிலும் சரி முன்னேற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.

தற்போது அவருக்கு இடமாற்றம் வந்துள்ளது. குறித்த இடமாற்றத்தை பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு ஆகியோர் விரும்பவில்லை.

குறித்த அதிபர் மேலும் சிறிது காலம் குறித்த பாடசாலையிலே கடமையாற்றி பாடசாலையை நல்ல நிலைக்கு கொண்டு வந்ததன் பின்பு குறித்த இடமாற்றம் மேற்கொள்ள முடியும்.

குறித்த அதிபரின் இடமாற்றம் பாடசாலை மாணவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் அறிவித்தல் வழங்கினோம்.

ஆனால், எது வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் வியாழக்கிழமை காலை மடு வலயக்கல்வி பணிமனையில் இருந்து உயர் அதிகாரிகள் பாடசாலைக்;கு வந்து அதிபரின் இடமாற்றக்கடிதத்தை அவரது கையிலே ஒப்படைத்தனர்.

வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலை அதிபரிடம் இடமாற்றக்கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் காலை 10.30 மணியளவில் புதிய அதிபர் பாடசாலைக்கு வந்து கையொப்பமிட்டார்.

இது ஒரு சதியாகவே நாங்கள் கருதுகின்றோம். எமது பாடசாலையின் முன்னேற்றத்தை இவ் இடமாற்றம் தடையாக இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி  எது வித பலனும் கிடைக்காத நிலையிலே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாது பகிஸ்கரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பாடசாலைக்கு நேற்றய தினம் மாணவர்கள் எவரும்  செல்லவில்லை. ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் குறித்த பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .