Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 06 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தை உரிய இடத்தில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், திங்கட்கிழமை (06) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு நிரந்தர கட்டடம் இன்றியே இயங்கி வருகின்றது. தற்போது திட்டமிடல் பகுதி புளியம்பொக்கணையிலும் ஏனைய அலகுகள் வெலிகண்டல் பகுதியிலும் இயங்கி வருகின்றது. வௌ;வேறு இடங்களில் அலகுகள் இயங்குவதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
2010ஆம் ஆண்டு கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றும் அமைவிடத்தில் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக நிதி திரும்பிச் சென்றது.
தற்போது மீண்டும் நிதி கிடைக்கப் பெற்று அமைவிடத்துக்கான பிரச்சினை தீர்க்கப்பட்டு உரிய இடத்தில் கட்டிடம் அமைப்பதற்கான கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago