2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ் டயரில் சிக்குண்டு நபர் பலி

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை நகரத்தில் தனியார் பஸ்ஸின் டயரில் சிக்குண்டு நபரொருவர் இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டிய நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த குறித்த பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு முயற்சித்த நபர், தவறி விழுந்து பஸ் டயரில் சிக்குண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதன்காரணமாக படுகாயமடைந்த குறித்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.
சம்பவத்தையடுத்து, குறித்த தனியார் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .