Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 06 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்
இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து தலைமன்னார் பகுதிக்கு கஞ்சா கடத்திய இந்திய மீனவர்கள் 4 பேரை இன்று திங்கட்கிழமை(06) காலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 29 கிலோகிராம் கஞ்சாவையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி வருகை தந்த இந்திய மீனவர்களின் படகை சோதனையிட கடற்படையினர் சென்ற போது குறித்த மீனவர்கள் தமது படகில் வைத்திருந்த மூடைகளை கடலில் தூக்கி எறிந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நான்கு இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா மூடைகள், இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வாசி ஒருவருக்கு கைமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடலில் வீசிய கஞ்சா மூடைகளை கைப்பற்றியதுடன் குறித்த நான்கு மீனவர்களையும் கைதுசெய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு கஞ்சா மூடைகளையும் ஒப்படைத்தனர்.
இதன் போது கடலில் வீசப்பட்ட நிலையில் 29 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த தலைமன்னார் பொலிஸார்,இந்திய மீனவர்கள் நால்வரையும் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago