Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 07 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணி அபிவிருத்தி அமைச்சின் நேரடி தலையீட்டின் கீழ் கிளிநொச்சி, கண்டாவளை, மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருப்பவர்களுக்கு தீர்வினை பெற்றுத்தந்து அந்த காணிகளை மக்களுக்கு வழங்கும் பட்சத்தில், அவர்களுக்கான உதவித்திட்டங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கண்டாவளை பிரதேசத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு பயன்பாடின்றிக் கிடந்த மத்திய வகுப்;புத்திட்ட காணிகளில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வாழந்;து வருகின்றனர்.
இவர்களுக்கான காணி உரிமம் இல்லாததால் நிரந்தர வீட்டுத்திட்டங்கள், நிலையான வாழ்வாதாரம் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியாது மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்;து வருகின்றனர். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஏற்;கெனவே வழங்கப்பட்ட மத்திய வகுப்புத்திட்ட காணிகள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையானது அவர்களது அக்கறையின்மையை காட்டுகின்றது. இவ்வாறான காணிகள் அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்;டு காணிகள் இன்றி மீள்குடியேறி மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய அபிப்பிராயம்' என்றார்.
'அந்த வகையில், இந்த காணிகள் தொடர்பாக காணி அபிவிருத்தி அமைச்சு தலையிட்டு இதற்கு உடனடியாக தீர்வொன்;றினைப்பெற்று தற்போது இருக்கின்ற மக்களுக்கு இந்த காணிகளை வழங்குமாயின் அந்த மக்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.' என அவர் மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago