Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 07 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாங்குளம் ஆதார வைத்தியசாலை, பெரும் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும் அவ்வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மாங்குளம் ஆதார வைத்தியசாலையானது முல்லைத்தீவு மாவட்டத்;தின் பிரதான ஒரு வைத்தியசாலையாக காணப்படுகின்றது.
ஒலுமடு, பெரியபுளியங்குளம், அம்பகாமம், புலுமச்சிநாதகுளம், மாங்குளம், கருப்பட்டமுறிப்பு, மேளிவனம், கற்கிடங்கு, கிழவன்குளம், பனிக்கன்குளம், கொம்புவைத்தகுளம், பாலைப்பாணி, வன்னிவிளாங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது மருத்துவ தேவைகளை இவ்வைத்தியசாலையினூடாகவே நிறைவு செய்கின்றனர்.
இவ்வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு, மகப்பேற்று விடுதி, ஆய்வுகூட வசதிகள் எவையும் இல்லாதிருப்பதால்இப்பகுதி மக்கள் தமக்கான மருத்துவ தேவையை நிறைவு செய்வதற்கு வவுனியா அல்லது கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago