2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஜூலை 08 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்தியாவில் இருந்து 29 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை மன்னார் பகுதிக்கு கொண்டு வந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, செவ்வாய்க்கிழமை(7) உத்தரவிட்டார்.

இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து தலைமன்னார் பகுதிக்கு கஞ்சா கடத்திய இந்திய மீனவர்கள் 4 பேரை திங்கட்கிழமை(06) காலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 29 கிலோகிராம் கஞ்சாவையும் மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி வருகை தந்த இந்திய மீனவர்களின் படகை சோதனையிட கடற்படையினர் சென்ற போது குறித்த மீனவர்கள் தமது படகில் வைத்திருந்த மூடைகளை கடலில் தூக்கி எறிந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நான்கு இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா மூடைகள், இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வாசி ஒருவருக்கு கைமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கடலில் வீசிய கஞ்சா மூடைகளை கைப்பற்றியதுடன் குறித்த நான்கு மீனவர்களையும் கைதுசெய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு கஞ்சா மூடைகளையும் ஒப்படைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .