2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஜூலை 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன், திங்கட்கிழமை (06)  உத்தரவிட்டார்.

கடந்த வாரம் பளை பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேகநபர் ஒருவர் கட்டுவன் கூறைமுனைப் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், தெல்லிப்பழை பொலிஸாரினால் திங்கட்கிழமை (06) அதிகாலை குறித்த சந்தேகநபர்  கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (06) மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடுத்த தவணைக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .