Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 08 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் 1,620 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் கடந்த ஆண்டு பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இத்திட்டம் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலகங்களின் 20 கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் உள்ள 40,000 மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கரைச்சி இரத்தினபுரம் பகுதியிலும், கண்டாவளை குமரபுரம் பகுதியிலும் இரண்டு பாரிய நீர்த் தாங்கிகள் அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அதேபோன்று நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. எனினும் குழாய் பொருத்தும் பணிகள் பூர்த்தியடையவில்லை' என்றார்.
ஏனெனில், வெடிபொருட்களின் அபாயம் காணப்படுகிறது. வெடிபொருட்கள் இன்னமும் முழுமையாக அகற்றப்படாமையால் குழாய் பொருத்தும் பணிகளை பூர்த்தி செய்யமுடியவில்லை. ஏற்கனவே குழாய் பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்னுள்ள பகுதியிலும், பரந்தன் கரடிப்போக்கு சந்தியிலும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.
ஜப்பான், இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதுடன் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லவில்லை எனவும் வெடி பொருட்களின் அச்சம் தீர்க்கப்பட்டால் பணிகள் பூர்த்திசெய்யப்படும்' என தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago