Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 09 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பெறுமதியில் இரண்டு வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக வித்தியாலய அதிபர் தங்கவேல் கண்ணபிரான், வியாழக்கிழமை (09) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
புத்தளத்தை தளமாகக் கொண்டு இயங்கும் கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் 2 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு வகுப்பறைக் கட்டடத் தொகுதியும் வடமாகாண கல்வி திணைக்களத்தின் 5.8 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு வகுப்பறைக் கட்டடத் தொகுதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.
472 மாணவர்கள் கல்வி பயிலும் இந்தப் பாடசாலையில் 20 வகுப்பறைகள் தேவையாகவுள்ளன. தற்போது 9 வகுப்பறைகள் நிரந்தரக் கட்டடத்தில் இயங்கும் அதேவேளை, மிகுதி வகுப்பறைகள் தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றன.
அமைக்கப்படும் இரண்டு வகுப்பறைக் கட்டடத் தொகுதியிலும் இருந்து 7 வகுப்பறைகள் கிடைக்கப்பெறும் எனவும் அதன் மூலம் வகுப்பறைப் பற்றாக்குறை பெருமளவுக்கு நிவர்த்தி செய்யப்படும் என அதிபர் தங்கவேல் கண்ணபிரான் மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago