Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 09 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் உள்ள பண்ணைகளின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரவைகள் இல்லாமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பண்ணை உரிமையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அக்கராயன் குளத்தின் கீழ் தற்போது 2,500 ஏக்கரில் சிறுபோக செய்கை இடம்பெற்று வருவதால் வயல் நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடமுடியவில்லை. மேய்ச்சல் தரவைகள் இல்லாமையால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர்கள் கூறினர்.
இது தொடர்பில் விவசாயக் குழு, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் கூறினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவைகள் இல்லாதது பொதுவான பிரச்சனையாக இருப்பதுடன், விலங்கு வேளாண்மை வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ளது. பண்ணைகள் அதிகமாகவுள்ள பகுதிகளில் மேய்;ச்சல் தரவைகளை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago