Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்,எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுவை, செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் நேற்று (10) கையளித்தனர்.
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை நிறைவு செய்ததன் பின்னர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்புமனுவை கையளித்திருந்தனர்.
வவுனியா வைத்தியசாலை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையுடன் ஊர்வலமாக செல்ல பொலிஸாhரினால் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, க. சிவனேசன் ஆகியோர் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதேவேளை, நேற்றைய தினம் நான்கு கட்சிகளும் ஒரு சுயட்சை குழுவும் நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
உபலி சமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி கட்சியினர், சந்திரகுமார் கபிலன் தலமையிலான முன்னிலை சேசலிச கட்சியினர், கே.திலீபன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் மற்றும் ஒரு சுயட்சை குழுவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அத்தோடு, கடந்த 06ஆம் திகதி டபிள்யு. எம். சந்தான குமார தலமையிலான ஜென சத பெறமுனா கட்சியினர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago