Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 11 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பகுதியில் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும், உரிய ஆவணங்கள் இன்றியும் மோட்டார் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு 23 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி, பளை பகுதியில் அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம், வரியனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திச் சென்றோரை கைது செய்த கிளிநொச்சி, பளை பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பளைப்பகுதியில் காப்புறுதிப்பத்திரம், வரியனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 6,500 ரூபாயும் பொலிஸாரின் சைகையை மீறியவருக்கு 1,500 ரூபாயும் தவறான முறையில் வாகனம் செலுத்திய 1500 ரூபாயும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பகுதியில் வரிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 1,500 ரூபாயும் மோட்டார் சைக்கிளில் மேலதிக பாரம் ஏற்றிச் சென்ற ஒருவருக்கு 1,000 ரூபாயும் தெளிவற்ற இலக்கத்தகடு வைத்திருந்த மூவருக்கு தலா 500 ரூபாயும் விதித்து தீர்ப்பளித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago