Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 18 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயனில் 06 மாதங்களில் குடிநீர் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட குடிநீர்த்திட்டமொன்று இரு ஆண்டுகள் கடந்த நிலையிலும் திட்டம் செயற்படுத்தப்படாமல் முடங்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இருஆண்டுகளுக்கு முன்னர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் 16 மில்லியன் ரூபாய் செலவில் அக்கராயன் மத்தியப்பகுதி, கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்குப் பகுதிகளுக்கான குடிநீர்த்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்டு வேலைகள் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை குடிநீர் வழங்கல் தொடங்கப்படவில்லை.
அக்கராயனில் ஜூன், ஜூலை மாதங்களில் கடுமையான குடிநீர் நெருக்கடி ஏற்படுவது வழமையாகும்.
அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலம் ஆகிய இருபாடசாலைகளின் மாணவர்களும் பிரதேச மக்களும் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் குடிநீர்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமலிருப்பது பெரும் சிரமங்களை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளரான தி.பாரதிதாசன் கருத்துத் தெரிவிக்கையில்,
நீர் வழங்குகின்ற கிணற்றில் கலங்கல் தன்மை காணப்படுகின்றது. அக்கலங்கள் தன்மையினை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
குறைந்தது மூன்று வாரங்களில் குடிநீர் வழங்க முடியுமென நம்புகின்றேன். குடிநீர் வழங்கல் என்பது உடனடியாக மேற்கொள்ளமுடியாது.
ஏனெனில் மக்களுக்கு தூய்மையான குடிநீரையே வழங்கவேண்டும். அதற்கான வேலைகள் இடம்பெற்றுவருகின்றதெனவும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago