2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள உணவகத்தில் திருட்டு

George   / 2015 ஜூலை 18 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியிலுள்ள உணவகமொன்றில் வெள்ளிக்கிழமை(17) இரவு கொள்ளையிடபட்டுள்ளதாக உணவக உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 பவுண் தங்கநகை, 3,50,000 ரூபாய் பணம், 30,000 ரூபாய் பெறுமதியான அலைபேசி அட்டைகள் மற்றும் சிகரெட் பெட்டிகள் என்பவை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கராயன் சந்தியிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள உணவகத்திலேயே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .