Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 22 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வசித்து வரும் காத்தமுத்து கணபதி என்பவரின் வீடு ,செவ்வாய்கிழமை (21) மாலை மின்னொழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்ததில் வீட்டுப்பாவனைப் பொருட்கள் உடுபுடவைகள் முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
வழமை போன்று குறித்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்றிருந்தனர்.
இச்சமயம் வீட்டில் அவரது இரு பிள்ளைகளும் பிள்ளைகளை பராமரித்து வரும் அவரது உறவினரான மூதாட்டியும் வீட்டின் அயலில் உள்ள வீடொன்றில் இருந்துள்ளனர்.
அந்நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை எழுவதைக் கண்டு கூக்குரலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது வீட்டினுள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டபோதும் வீட்டினுள் இருந்த வீட்டுப்பாவனைப் பொருட்கள் உடுபுடவைகள் முக்கிய ஆவணங்கள் என வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும் பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago