2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காணாமல்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

காணாமல்போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (11), வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளியிடப்பட்ட துண்டுபிரசுரமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமொன்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் தமது காணாமல் போன பிள்ளைகளும் இடம்பெற்றிருப்பதாகக் கூறிய பெற்றோர்கள் சிலர், அப்புகைப்படத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனோர் தொடர்பில் தொடர்ந்தும் அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றுவதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களவு உறவுகள் விடுவிக்கப்படாவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாம் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை எனவும் காணாமல்போனோர் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .