2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

த.தே.ம.மு வேட்பாளரிடம் சி.ஐ.டீ விசாரணை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமாரிடம் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (11) காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 வரை, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு புள்ளடியிட்ட வாக்குச்சீட்டின் புகைப்படத்தைப் பெற்று, அதனை தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் பதிவேற்றியமை தொடர்பிலேயே இந்த பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அப்புகைப்படம் எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதுடன் அவர் தனது முகப்புத்தகக் கணக்கைப் பார்க்கப் பயன்படுத்தும் அலைபேசியும் சீல் வைக்கப்பட்டு குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டது.

எதிர்வரும் 2ஆம் திகதி மீண்டும் கஜேந்திரகுமாரிடம் விசாரணைகள் இடம்பெவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .