2025 ஜூலை 14, திங்கட்கிழமை

2015இல் 585 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட  பாடசாலைகளில் 2015ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் முதல் 585 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேள் திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

தற்காலிக இணைப்பில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் கடமையாற்றிவருகின்ற ஆசிரியர்கள், தற்காலிக இணைப்புக்காலம் முடிவடைந்து மாற்றலாகி செல்வதாலேயே இந்த பற்றாக்குறை ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்காக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு  ஆசிரியர்கள் தற்போது உள்ளனர். எனினும், பாட ரீதியான ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு மாற்றலாகி செல்லும் ஆசிரியர்களால், 585 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .