2025 ஜூலை 14, திங்கட்கிழமை

277 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் தங்கவைப்பு

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் பெய்துவரும் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (29) தெரிவித்துள்ளது.

காலநிலை சீரின்மையால் வீடுகள் பாதிப்படைந்த 277பேர் தொடர்ந்தும் புதிய வேலர் சின்னக்குளம், விளக்கு வைத்தகுளம், சமனங்குளம், மகிழங்குளம், பூந்தோட்டம் நலன்புரி நிலையம் 5 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் 3 நாட்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் அவற்றை நிறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நலன்புரி நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாததுடன் சிறுவர்கள் உட்பட அனைவரும் பெரும் பாதிப்புகளுக்கு மீண்டும் முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

844 குடும்பங்களை சேர்;த 2,865 போர் வவுனியா மாவட்டத்தில் மழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளதுடன் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 617 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்தும் உள்ளது.

இந் நிலையில் பாவக்குளம் வான் பாய்;து வரும் நிலையில் தொடர்ந்தும் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்கப்படும் என்பதனால் கிறிஸ்தவகுளம், மெனிக்பாம், கந்தசாமிநகர், பாவக்குளம் படிவம் 2, 4, வீடியாபாம் ஆகிய கிராமங்கள் பாதிப்படையும் என்பதனால் அப்பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை, பாதிப்படைந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் மோசஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .