2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

45பேர் சாட்சியமளித்துள்ளனர்: மேலும் 60 பேருக்கு அழைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வுகளின் இரண்டாவது நாளான இன்று திங்கட்கிழமையும் (03) முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச மக்களிடமிருந்து முறைப்பாடுகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற அமர்வில் 45பேர் சாட்சியமளித்துள்ளனர். எனினும் இன்றைய தினம் 60 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நாளை 4ஆம் திகதியும் நாளை மறுதினம் 5ஆம் திகதியும்  ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .