2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

50 ரூபாய் கொள்வனவு செயற்றிட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தேசிய ரீதியில், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாய்க்கு நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யும் செயற்றிட்டம், வவுனியாவில் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, நெல் சந்தைப்படுத்தும் சபையில், வவுனியா மாவட்டச் செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி கட்டளைத்தளபதி போபித தர்மசிறி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தன, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், பிரதேச செயலாளர் ந. கமலதாசன், விவசாய திணைக்களத்தின் அதிகாரி சகிலாபானு உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .