2025 ஜூலை 14, திங்கட்கிழமை

75,000 மீன்குஞ்சுகள் விடும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் நோக்கில்,  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 03 நன்னீர் மீன்பிடிக் குளங்களில் 75,000 மீன்குஞ்சுகள் வடமாண மீன்பிடி, போக்குவரத்து  அமைச்சால் ஞாயிற்றுக்கிழமை (16) விடப்பட்டன.

இதன்போது, வவுனிக்குளத்தில் 25,000 மீன்குஞ்சுகளும் முத்தையான்கட்டுக்குளத்தில் 25,000 மீன்குஞ்சுகளும், மடவால சிங்கம் குளத்தில் 25,0000 மீன்குஞ்சுகளும் விடப்பட்டன.

இதனால், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 300 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று  வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், மேற்படி மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில்,   பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .