2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

8 கோரிக்கைகளினை முன்வைத்து தம்பிராசா பாதயாத்திரை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 05 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா, எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார்.
 
இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா றம்பைக்குளம் கருமாரி அம்மன் கோவிலிருந்து ஆரம்பித்துள்ளார்.
 
இது பற்றி தம்பிராசா கருத்துக் கூறுகையில்,
 
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொள்ள வேண்டும், அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும், அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதும் அவர்களை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கையினை முன்வைத்தே இந்த பாத யாத்திரியை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X