2025 ஜூலை 14, திங்கட்கிழமை

80 பேருக்கு விசேட சத்திர சிகிச்சை

Sudharshini   / 2014 நவம்பர் 30 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சுகாதார அமைச்சின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில், உதட்டு பிளவுகள், அண்ணப்பிளவு மற்றும் முகத்தில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றுக்கான விசேட சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் குறித்த குறைபாடுகளுடன் 80 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கான முதற்கட்ட சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சத்திரசிகிச்சை தொடர்பில் மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட் மற்றும் மன்னார் பிராந்திய பல் வைத்திய அதிகாரி சிறிதேவி வேதவனம் ஆகியோர் சுகாதார அமைச்சிக்கு முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த 28ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (30) வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளைச் சேர்ந்த சுமார் 30 பேர் அடங்கிய வைத்திய குழுவினர் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

மேலும், குறித்த குறைபாடுகளுடன் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்றகொள்ளப்படும் என மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .