2025 ஜூலை 14, திங்கட்கிழமை

800 குடும்பங்களை வாழவைக்கும் மருதமடுக்குளம்

George   / 2014 நவம்பர் 12 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளமையால், அதன் கீழுள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் 800 வரையான குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக, முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்;கள பொறியிலாளர், புதன்கிழமை (12) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்;டத்தின் முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்;களத்தின் கீழுள்ள மருதமடுக்குளம் 1955 ஆம் ஆண்டில் முதன்முறையாக புனரமைக்கப்பட்டது.

எனினும் 1968, 1970 மற்றும் 2008 ஆகிய காலப்பகுதியில் பெய்த கனமழையால், குளத்தின் அணைக்கட்டுக்கள் உடைப்பெடுத்து, குளத்தின் அணைக்கட்டு பாரிய சேதங்களுக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், 89 மில்லியன் ரூபாய் செலவில் 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குளத்தின் அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்கால் உள்ளிட்டவை சிறந்த முறையில் புனரமைப்பு செய்யப்பட்டன.

புனரமைப்பு பணிகள் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுற்றதின் பின்னர் 2014 ஆம் ஆண்டு சிறுபோக செய்கையில் இந்த குளத்தின் கீழ் 60 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, இம்முறை காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குளத்தின் கீழுள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 800 விவசாயிகள் நெற்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என பொறியியலாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .