2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஏ9 வீதி விபத்தில் பெண் பலி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலைக்கு செல்வதற்காக ஏ – 9 வீதியை கடக்க முற்பட்ட இவ்விரு பெண்களையும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்குக் காரணமான டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .