Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை மூடி, ஒரு மாதத்துக்குள் கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், நேற்று (11) நடைபெற்ற கூட்டத்திலேயே, மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்குள், அக்கராயன்குளம் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றியமைக்கும் பொறுப்பு, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை காலமும், அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதெனவும் வெளிநோயாளர் பிரிவு சேவையை மாத்திரம் ஸ்கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற ஒரு பொதுநோக்கு மண்டபத்தில் சாதாரண சிகிச்சைகளை மாத்திரமே வழங்க முடியுமெனத் தெரிவித்த அக்கராயன் வைத்தியசாலை வட்டாரங்கள், அதுவும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அடிப்படை வசதிகளற்ற ஒரு கட்டடத்தில் சேவையை வழங்கக்கூடியதாக இருக்கும் என தங்களால் உறுதியாக கூற முடியாதெனவும் கூறியுள்ளது.
“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளி இருக்கும் வரை அக்கராயன்குளம் வைத்தியசாலை கொரனா வைத்தியசாலையாக இயங்கும் என்பதால், அடுத்துவரும் பல மாதங்கள், சில வருடங்களுக்கு இந்த வைத்தியசாலையால் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கமுடியாது போகும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டுகேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், மத்திய அரசாங்கத்தின் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கமைய, அக்கராயன் வைத்தியசாலை, மாவட்டத்துக்கான கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளதென்றார்.
இதுவொரு தற்காலிக ஏற்பாடெனத் தெரிவித்த அவர், எனவே இது தொடர்பான தீர்மானம் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துபேசியே மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
அத்துடன், “இதற்கு பிரதேச மக்கள், அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த விடயம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் விளக்கமளிக்கும் கூட்டமொன்று, அக்கராயனில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும்” என்றும் கூறினார்.
எனினும், அந்தக் கூட்டம், இன்று (12) நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
2 hours ago